Ads Area

மிளகாய்த்தூளை கரைத்து சிறுமிகள் மீது ஊற்றிய தாய் மாமன் கைது

 சுமணசிறி குணதிலக

மொனராகலை- ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்டெமண்டிய பிரதேசத்தில் பாட்டியின் அரவணைப்பில் இருந்த இரண்டு பிள்ளைகளை கொடுமைப்படுத்திய, அப்பிள்ளைகளின் மாமா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

13 மற்றும் 9 வயது சிறுமிகள் இருவரையும் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில், அப்பிள்ளைகளின் தாயின் உடன்பிறந்த சகோதரனான 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமிகளின் தந்தை, தாயையும் பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றுள்ள நிலையில், தாய் கொழும்பில் பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில், சிறுமிகள் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையிலேயே குறித்த நபர், சிறுமிகளை கடுமையாக தாக்கி, மிளகாய்த் தூளை கரைத்து முகத்தில் ஊற்றியுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Thanks - https://www.tamilmirror.lk/



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe