Ads Area

Extra 10 இலட்சம் வரதட்சனை கேட்டதால் மாப்பிளையை வெளுத்த வாங்கிய பெண் விட்டார் 😆😆😆


திருமணத்திற்கு முந்தைய நாள் பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை வீட்டார் எக்ஸ்ட்ரா ரூ10 லட்சம் வரதட்சனை கேட்டதால் பெண் வீட்டார் மாப்பிள்ளையை வெளுத்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

உ.பி மாநிலம் காஸியாபாத் அருகே உள்ள சஹிபாபாத் பகுதியில் சமீபத்தில் ஒரு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருமணத்திற்காக இரு குடும்பத்தாரும் மண்டபத்திற்கு வந்திருந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகனின் தந்தை, மணமகளின் தந்தையை அழைத்து திருமணத்திற்கு வரதட்சனையாக ரூ10 லட்சம் அதிகமாக வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மேலும் 10 லட்சம் கொடுத்தால்தான் திருமணம் நடக்கும் என்றும், அந்த வரதட்சணையை தராவிட்டால் திருமணத்தை நிறுத்திவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

மணப்பெண் வீட்டார் சார்பில் ஏற்கனவே ரூ3 லட்சம் பணம் மற்றும் ரூ1 லட்சம் மதிப்பிலான வைர மோதிரத்தை வரதட்சனையாக கொடுக்க ஒப்புக்கொண்டு கொடுத்துளு்ளனர்.

இந்நிலையில் மேலும் ரூ10 லட்சம் கேட்டதால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருடன் வாக்குவாதம் செய்தனர். 

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருவீட்டாரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மணப்பெண் வீட்டார் மாப்பிள்ளையை சூழ்ந்து அவரை தாக்கினர். 

மேலும் அங்கிருந்த போலீஸ் காரர் ஒருவர் இரு தரப்பையும் பிரித்துவிட முயற்சி செய்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe