தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் 120 ட்ராமாடோல் (Tramadol pills) எனப்படும் போதை மாத்திரைகளுடன் விமான நிலையத்திற்கு வந்த இந்தியர் ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அல்-ராய் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் விமான நிலையத்தில் குழப்பமான நிலையில் சுற்றித் திரிந்த இந்திய பயணி மீது சந்தேகம் கொண்டு, அவரது பொருட்களை சோதனைக்கு உட்படுத்தியதில், பல்வேறு இடங்களில் போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, குவைத் சர்வதேச விமான நிலையத்தில் 200 கிராம் கஞ்சாவை நாட்டிற்கு கடத்த முயன்ற இலங்கையர் ஒருவரையும் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமான சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அல்-ராய் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்தி மூலம் - http://www.arabtimesonline.com