Ads Area

உலகின் வலிமையான 10 நாணயங்களின் பட்டியலில் குவைத் தினார் முதலிடத்தில் உள்ளது.

உலகின் வலிமையான 10 நாணயங்களின் பட்டியலில் குவைத் தினார் முதலிடத்தில் உள்ளதாக ஸ்கூப் வூப் இணையதளம் வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் அமெரிக்கா டாலர் மற்றும் பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிரான ஒவ்வொரு நாணயத்தின் பணப்பரிமாற்ற மதிப்பு விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் 1960 வரையில் குவைத்தில் அதிகாரப்பூர்வமாக வர்த்தக நாணயமாக இந்திய ரூபாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடதக்கது. 

அதன் பிறகு 1961 இல் குவைத் அரசு தங்களின் அதிகாரப்பூர்வ நாணயமாக தினார்களை அறிமுகம் செய்தது. மேலும் வெளியிட்ட மிக குறுகிய காலத்திலேயே மிகவும் மதிப்புமிக்க நாணயமாக மாறியது. மேலும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாணயங்களில் முதல் இடத்திற்கு இது முன்னேறியுள்ளது. குவைத்தில் உலகிலுள்ள மொத்த எண்ணெய் இருப்பில் 9 சதவீதம் உள்ளது. எனவே குவைத் எண்ணெய் வளம் மிக்க நாடாகவே கருதப்படுகிறது. அதேபோல் நாட்டின் மொத்த வருவாயில் 80 சதவீதம் வரையில் எண்ணெய் சார்ந்தே உள்ளது. குவைத் தினாருக்கு அடுத்த படியாக பஹ்ரைன் தினார் உலகின் இரண்டாவது வலுவான நாணயமாவும் மற்றும் ஓமான் ரியால் முன்றாவது இடத்திலும் உள்ளது எனவும் ஸ்கூப் வூப் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெளிவாகியுள்ளது. 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe