குவைத்தில் இந்திய பணிப்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த எத்தியோப்பியா பணிப்பெண்ணிற்கு மரண தண்டனை
அப்துல்லா அல்-ஒத்மான் தலைமையிலான குற்றவியல் நீதிமன்றம், அப்துல்லா அல்-முபாரக் பகுதியில் கடந்த ரமழான் மாதத்தின் முதல் நாளில், இந்திய பணிப்பெண் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்ற எத்தியோப்பியா பெண்ணுக்கு மரண தண்டனை விதித்துள்ளது என்று அல்-ராய் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.