Ads Area

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் 4 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதிகளில் அழைத்துச் சென்று சித்திரவதை (வீடியோ)


பாகிஸ்தானின் வர்த்தக நிலையம் ஒன்றில் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இளம்பெண் உட்பட 4  சுமார் ஒரு மணி நேரம் தெருக்களில் நிர்வாணமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உள்ள வர்தக நிலையம் ஒன்றுக்குச் சென்ற 4 பெண்கள் குறித்த வர்த்தக நிலையத்தில் பொருட்களை திருடியபோது பிடிக்கப்பட்டனர்.

இதையடுத்து அங்கு கூடியவர்கள் ஓர் இளம்பெண் உட்பட 4 பெண்களையும் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்களது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தி 4 பெண்களையும் சுமார் ஒரு மணி நேரம் தெருக்களில் நிர்வாணமாக அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தின் 2 வீடியோக்கள் சமூகவலை தளங்களில் பரவி வருகிறது. அதில் 4 பெண்கள் கம்பால் தாக்கப்படுவதும், ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.




பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும்போது, ‘பைசலாபாத்தில் உள்ள பாவாசாக் சந்தைக்கு நாங்கள் சென்றபோது தாகம் எடுத்ததால் கடை ஒன்றுக்குள் சென்று தண்ணீர் கேட்டோம்.

ஆனால் நாங்கள் திருடும் நோக்கத்தில் கடைக்குள் நுழைந்ததாக அதன் உரிமையாளர் குற்றம் சாட்டினார். பின்னர் அவர்கள் எங்களை சரமாரியாக தாக்கினார்கள். எங்களை நிர்வாணப்படுத்தி வீடியோக்களையும் எடுத்தனர். இந்த கொடுமையை யாரும் தடுக்க முன்வரவில்லை’ என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இது குறித்து  பொலிஸ் செய்தி தொடர்பாளர் கூறும்போது, இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் 5 முக்கிய சந்தேக நபர்களைக் கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளோம் என்றார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe