குலேந்திரன்
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தின் ஏற்பாட்டில் அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு கொவிட் 19 விழிப்புணர்வுச் செயலமர்வு அதிபர் என். பிரபாகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
நாவிதன்வெளி பிரததேச வைத்திய அதிகாரி வைத்தியர்.ரி.வினோதினி,நாவிதன்வெளி பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.ஜாபீர் ஆகியோர் கலந்துகொண்டு பெற்றோர்களுக்கான வழிப்புணர்வுச் செயலமர்வினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.