Ads Area

கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளராக டி.எம்.எல்.பண்டாரநாயக்க : இன்று கடமை பொறுப்பேற்பு.

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளர் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.

கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட டி.எம்.எல்.பண்டாரநாயக்க தமது கடமைகளை இன்று (7)திருகோணமலையில் அமைந்ததுள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் சமயத்தலைவர்களின் ஆசீர்வாதத்தின் பின்னர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ட அதிகாரியான இவர், இதற்கு முன்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாடிகோராள, திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe