Ads Area

அமீரக தொழிலாளர் சட்டம் ; ஒரு தொழிலாளி அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும்.??

ஐக்கிய அரபு அமீரகத்தின் தனியார் துறையில் முதலாளிகள் மற்றும் தொழிலாளிகளுக்கு இடையேயான பல்வேறு அம்சங்களை நிர்வகிக்கும் புதிய தொழிலாளர் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கின்றது. நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தனியார் துறை நிறுவனத்தில் பணிபுரிந்தால், உங்களுக்கான அதிகபட்ச வேலை நேரம் குறித்து சட்டம் சொல்வது என்ன என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய தொழிலாளர் சட்டமான 2021 இன் ஃபெடரல் ஆணை-சட்டம் எண். 33, முந்தைய தொழிலாளர் சட்டம் – 1980 ஆம் ஆண்டின் ஃபெடரல் சட்டம் எண். 8 -க்குப் பதிலாக பிப்ரவரி 2, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் பிரிவுகள் ஆர்டிகிள் 17 மற்றும் 18 ஆகியவை, வேலை நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது மற்றும் ஒரு தொழிலாளி இடைவேளை பெறுவதற்கு முன், அதிகபட்சமாக எவ்வளவு நேரம் வேலை செய்ய முடியும் என்பதை பற்றி குறிப்பிடுகிறது.

மேலும் தொலைதூரத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகத்திற்குச் செல்பவர்களுக்கு பயண நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதையும் இந்த ஒழுங்குமுறை உள்ளடக்கியுள்ளது.

பிற்காலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நிறைவேற்றப்படும் நிர்வாக விதிமுறைகளின் அடிப்படையில், விதிவிலக்காக சில தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு இந்த சட்டத்திற்கு மாற்றாக வேலை நேரங்கள் வகுக்கப்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் துறை ஊழியர்களுக்கான வேலை நேரத்தை உள்ளடக்கிய விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆர்டிகிள் (article) (17) – வேலை நேரம்

1. தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அதிகபட்ச சாதாரண வேலை நேரம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் அல்லது வாரத்திற்கு 48 மணி நேரம்.

2. அமைச்சரவை, அமைச்சரின் முன்மொழிவின் பேரில் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன், வேலை நேரம், இடைவேளை மற்றும் சில வகை தொழிலாளர்களுக்கு வேலை தடைசெய்யப்பட்ட நேரங்களுக்கு கூடுதலாக, இந்த சட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறைகளால் அமைக்கப்பட்ட மனிதவள வகைப்பாட்டின் படி  சில பொருளாதாரத் துறைகள் அல்லது சில வகை தொழிலாளர்களுக்கான தினசரி வேலை நேரத்தை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.

3. இந்த சட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறைகளால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின்படி குறிப்பிட்ட சில வகை தொழிலாளர்களைத் தவிர, வீட்டிலிருந்து வேலை செய்யும் இடத்திற்கு செல்ல தொழிலாளி ஒருவர் செலவழிக்கும் நேரங்கள் வேலை நேரத்திற்குள் கணக்கிடப்படாது.

4. இந்த சட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறைகள் ரமலான் வேலை நேரத்தை தீர்மானிக்கும்.

5. தொழிலாளி ஒரு நிறுவனத்தில் முழு நேர பணியாளராக இல்லாவிட்டால், இந்த சட்டத்தின் விதிகளின்படி தொழிலாளியை பணியமர்த்தும் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இல்லாவிட்டால், வேலையில் ஒப்புக்கொள்ளப்பட்ட நேரத்தை விட அதிகமான வேலை நேரத்தில் தொழிலாளர் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை.

6. தொழிலாளி அமீரகத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியில் இருந்தோ முதலாளியின் ஒப்புதலுடன் தொலைதூரத்தில் வேலையைச் செய்ய விரும்பினால், முதலாளி குறிப்பிட்ட வேலை நேரத்தை நிர்ணயிக்கலாம்.

ஆர்டிகிள் (article) (18) – தொடர்ச்சியான வேலை நேரம்

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளிகள் இல்லாமல் தொடர்ச்சியாக ஐந்து மணிநேரங்களுக்கு மேல் வேலை செய்யக்கூடாது. இந்த இடைவேளையானது ஒரு மணிநேரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும், மேலும் இந்த இடைவேளைகள் வேலை நேரத்தின் ஒரு பகுதியாக கணக்கிடப்படக்கூடாது.


தகவலுக்கு நன்றி - https://www.khaleejtamil.com/



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe