சீனாவில் 4 வயதில் கடத்தப்பட்ட சிறுவன் ஒருவர் 30 வருடத்திற்கு பிறகு தனது தாயுடன் சேர்ந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீனாவில் உள்ள Yunnan பகுதியில் வசித்து வரும் பெண்மணிக்கு 4 வயதில் Li Jingwei என்கின்ற மகன் உள்ளார். கடந்த 1989ஆம் ஆண்டு அந்த பெண் தனது மகனை Lankao பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது Li-யை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து அவர் எங்கு தேடியும் மகன் கிடைக்கவில்லை. இந்நிலையில் 4 வயதில் கடத்தப்பட்ட Li Jingwei சுமார் 30 வருடத்திற்கு பிறகு தனது தாயுடன் இணைந்துள்ளார்.
30 வருடத்திற்கு பிறகு தனது குடும்பத்துடன் சேர காரணமாக இருந்தது அவரது நினைவாற்றல் தான்.. சிறுவயதில் தனது ஊர் எப்படி இருந்தது குறித்து அப்படியே ஒரு காகிதத்தில் வரைந்து காவல் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்.
பொலிஸ் அந்த வரைபடத்தை வைத்து அவருடைய ஊரையும், குடும்பத்தையும் கண்டுபிடித்தனர். பிறகு DNA பரிசோதனையில் தாய்-மகன் உறவு உறுதி செய்யப்பட்டது. இது குறித்து Li Jingwei கூறியதாவது, எனது ஊர் நான் வரைந்தது போலவே இருக்கிறது.
எனக்கு சிறிய வயதில் இருந்து வரையும் பழக்கம் இருந்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. குடும்பத்தில் உள்ள அனைவரின் முகமும் எனக்கு ஞாபகம் இருக்கு. 30 வருடங்களுக்கு பிறகு முதல் முதலில் என் தாயுடன் பேசிய வீடியோ கால் மூலமீ நான் கண்டுபிடித்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.