Ads Area

தாத்தாவின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த பேரன் - வாகனத்தை பின்னோக்கி நகர்த்தும் போது கவனம் தேவை.

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது வாகனத்தின் பின்பகுதியில் நின்றிருந்த குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிமலவ பிரதேசத்தில் நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கனங்கே பகுதியைச் சேர்ந்த 3 வயதுடைய குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த குழந்தையின் தாத்தா குறித்த கெப் வாகனத்தை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் உயிரிழந்த குழந்தையின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe