Ads Area

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்றார் நடிகை அமலா பால்.

 துபாய்,

ஐக்கிய  அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது.

கடந்த மாதம் ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை நடிகை திரிஷா பெற்றார். அவரை தொடர்ந்து இந்த விருது இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா நடிகை அமலா பால்-க்கு நேற்று வழங்கப்பட்டது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமலா பால், " ஐக்கிய அரபு அமீரக அரசு சார்பாக வழங்கப்படும் கோல்டன் விசாவை பெற்றுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இதை எனக்கு பெற்று தர உதவிய அனைவருக்கும் நன்றி " என தெரிவித்துள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe