Ads Area

கத்தார் நாட்டில் விளையாட்டுத் துறையில் அசத்தும் இலங்கை பெண்கள்.

விளையாட்டுத் துறையில் ஆர்வமுடைய துணிச்சலான பெண்களுக்காக ‘QATAR WOMEN IN SPORTS' என்ற ஒரு புது முயற்சியாக கத்தார் வாழ் பெண்களால் ஒரு புது அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு அதன் முதற்கட்டமாக கடந்த (30.12.2021) Badminton Tournament ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. QATAR WOMEN IN SPORTS அமைப்பின் தலைவி திருமதி. நுசைலா பதுர்தீன் அவர்களின் வழிகாட்டுதலிலும் தலைமையிலும் திருமதி. ஜீவிதா திருச்செல்வம் மற்றும் திருமதி. ஹசூனா ரவூப் ஆகியோரின் ஒருங்கிணைப்பிலும் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றன.

இன் நிகழ்வுக்கு கத்தாருக்கான இலங்கைத் தூதுவரின் மனைவி Dr. Shezoon Mohideen பிரதம அதீதியாக கலந்துகொண்டார்.

சுமார் 11 அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் 1ம் இடத்தை ஜீவிதா மற்றும் பஹீமா வென்றனர். அதனை தொடர்ந்து பஸ்னா மற்றும் ஹஷ்மா 2ம் இடத்தையும் 3ம் இடத்தை ரயீசா மற்றும் ரம்சானி யும் பெற்றனர்.

இதன் போது கருத்து தெரிவித்த இவ்வமைப்பின் தலைவி திருமதி. நுசைலா பதுர்தீன், கத்தாரில் வசிக்கும் இலங்கைப் பெண்களுக்கான போட்டியை நடத்துவதில் தாங்கள் முன்னோடியாக செயல்பட்டதாக விளையாட்டுத்துறை பெண்கள் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Thanks - Madawala News.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe