Ads Area

இலங்கைக்கு விடுமுறை சென்று மீள கத்தார் திரும்புவர்களுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது – ஜன 01 முதல் புதிய நடைமுறை!

கத்தார் பொது சுகாதார அமைச்சு கொரோனாவின் தாக்கம் அடிப்படையில் நாடுகளை பச்சைப் பட்டியல் நாடுகள்(Green List Countries), சிவப்புப் பட்டியல் நாடுகள் (RED Lis​t ​Countries), விதிவிலக்கான சிவப்பு பட்டியல் நாடுகள் ( Exceptional Red ​List Countries ) என்ற அடிப்படையில், பிரித்து ஒவ்வொரு நாடுகளிலிருந்து கத்தாருக்கு பயணிப்பவர்களுக்கு தனித்தனியான பிரயான விதிகளைப் பின்பற்றுகின்றது.

கடந்த காலங்களில் விதிவிலக்கான சிவப்பு பட்டியல் நாடுகள் (Exceptional Red ​List Countries) என்ற பட்டியலில் இருந்த இலங்கை சிவப்புப் பட்டியல் (RED Lis​t ​Countries) நாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 01ம் திகதி முதல் (இன்று) மேற்படி நாடுகளுக்கான புதிய பிரயாண விதிகளைப் பின்பற்றுகின்றது.

அதன்படி சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து கத்தாருக்குப் பயணிப்பவர்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படடுள்ளனர்.

வகை – 01

1. கத்தார் பிரஜைகள் மற்றும் கத்தார் குடியிருப்பார்கள் (QID Holders)

கத்தார் சுகாதார அமைச்சினால் அங்கீகரிப்பட்ட கொரோனா தடுப்பூசி இரண்டையும் செலுத்தியவர்கள் கத்தாருக்கு வருகை தந்து விமான நிலையத்தில் நடத்தப்படும் PCR பரிசோதனையில் எதிர்மறை (Negative PCR) பெறுபேறுகள் பெறப்படும் போது தனிமைப்படுத்தில் இருந்து விதிவிலக்களிப்படுவார்கள். 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இது பொருந்தும்.

முழுமையானதடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது தடுப்பூசிக்கு தகுதியற்றவர்கள் அல்லது தேவையான தடுப்பூசி அளவை பூர்த்தி செய்யாதவர்கள் (1 Dose)  கத்தார் திரும்பியதும் 7 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

வகை – 02

முன்-அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஆன்-அரைவல் (on arrival) விசாக்களுடன் கத்தாருக்கு வருபவர்கள் (புதிதாக வருபவர்கள்)

கத்தார் சுகாதார அமைச்சினால் அங்கீகரிப்பட்ட கொரோனா தடுப்பூசி இரண்டையும் செலுத்தியவர்கள் கத்தார் திரும்பியதும் 2 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இது பொருந்தும்.

முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது தடுப்பூசிக்கு தகுதியற்றவர்கள் அல்லது தேவையான தடுப்பூசி அளவை பூர்த்தி செய்யாதவர்கள் (1 Dose)  கத்தார் வந்தடைந்தவுடன் 7 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கத்தார் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகள் வருமாறு!

Pfizer / BioNTech (Comirnaty) – Two Doses

Moderna (SpikeVax) – Two Doses

AstraZeneca (Covishield / Oxford / Vaxzevria​) – Two Doses

Jansen / Johnson & Johnson (only one dose)

அனைத்து தரப்பினரும் பயணிக்க முன்னர்,

72 மணித்தியாலங்களுக்குள் பெறப்பட்ட Negative PCR சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்

தடுப்பூசி பெற்றுக்கொண்டமைக்கான சான்றிதழ் (ஆங்கிலத்தில்)

எஹ்டெராஸ் (ehteraz) செயலியில் முற்பதிவு செய்திருத்தல் வேண்டும்

முக்கிய குறிப்பு : கத்தாருக்கான பிரயாண விதிகள் அவ்வபபோது கத்தார் சுகாதார அமைச்சினால் மாற்றப்படுவதனால், அமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் பிரவேசித்து தகவல்களை இற்றைப்படுத்துக்கொள்ளுதல் பயணிகள் அனைவரினதும் கடமையாகும்.

2022.ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதி முதல் பின்பற்றப்படும் பிரயாண விதிகளை முழுமையான அறிய இங்கு செல்க: COMPLE DETAILS IN ENGISH

Thanks - Qatar Tamil.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe