Ads Area

துபாயின் 10 வருஷத்துக்கான கோல்டன் விசா பெற்ற அடுத்த தமிழ் ஹீரோயின்..!

கலைத்துறையில் ஈடுபட்டுவரும் முன்னணி கலைஞர்களுக்கு துபாய் அரசு கோல்டன் விசாவை வழங்கிவருகிறது. 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் இந்த விசாவின் மூலமாக அமீரகத்தில் தங்கவும் நிகழ்ச்சிகளை நடத்தவும் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்ற நோக்கத்துடன் இந்த விசாவை சினிமா துறைகளில் ஜொலிப்பவர்களுக்கு வழங்கிவருகிறது துபாய் அரசு.

சமீபத்தில் பிரபல தமிழ் நடிகை த்ரிஷாவிற்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை வாழங்கி கவுரவப்படுத்தியது துபாய். இந்நிலையில் நடிகை ராய் லட்சுமிக்கும் இந்த கோல்டன் விசாவை துபாய் அரசு வழங்கியிருக்கிறது.

ராய் லட்சுமி

கர்நாடக மாநிலம் பெல்காவியைச் சேர்ந்தவரான ராய் லெட்சுமி விளம்பரங்களின் மூலமாக தனது கலையுலக வாழ்க்கைக்குள் வலது கால் எடுத்துவைத்தார். அதன்பின்னர் தாம் தூம் மூலமாக பிரபலமான ராய் லட்சுமி, காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை உள்ளிட்ட படங்களின் மூலமாக ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றார்.

கோல்டன் விசா

குறிப்பிட்ட துறைகளில் சாதிக்கும் நபர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் அமீரகத்தின் பிரதமரும் துபாய் எமிரேட்டின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல்  மக்தூம் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கோல்டன் விசாவை அறிமுகம் செய்தார்.

கலைத்துறை மட்டுமல்லாது, அறிவியல், ஆராய்ச்சி, மருத்துவம், பொறியியல், முதலீடு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் இந்த விசாவானது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, விளையாட்டு வீரர்கள், படிப்பில் சிறந்து விளங்குபவர்களுக்கும் துபாய் அரசு இந்த 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாலாவை வழங்கிவருகிறது.

முன்னணி நடிகர்கள்

அமீரகத்தின் இந்த 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவைப் பெறும் முதல் நடிகை ராய் லட்சுமி அல்ல. இதற்கு முன்னரே பல இந்திய நடிகை, நடிகர்கள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், பின்னணி பாடகிகளுக்கு இந்த விசா வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் அமீரக அரசின் கோல்டன் விசா பெற்ற முக்கியய நடிகை, நடிகர்களின் பட்டியலைக் கீழே காணலாம்.

இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய் தத், மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, பிருதிவிராஜ், துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின், பாடகி சித்ரா ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது.

தமிழ் நடிகை த்ரிஷாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியது. இதன் மூலம் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற சிறப்பை அவர் பெற்றார். இப்போது, இந்த வரிசையில் ராய் லட்சுமியும் இணைந்துள்ளார். அதேபோல, இயக்குநர் மற்றும் நடிகரான பார்த்திபனுக்கும்  கடந்தாண்டு கோல்டன் விசா வழங்கி கவுரவப்படுத்தியது அமீரக அரசு.

இதன் மூலம் கோல்டன் விசாவைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையையும் பார்த்திபன் பெற்றார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe