நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வருடத்தின் முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை உறுதியுரை நிகழ்வு இன்று (03) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிகா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு லறிப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், சமுர்த்தி தலைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பழீல், கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட் உள்ளிட்ட பிரிவுத் தலைவர்கள், சகல உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதேச செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்கு உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி இடம் பெற்றது.