(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)
அண்மைக்காலமாக பெய்து வந்த மழை காரணமாக சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிற்குள் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கான முற்பணம் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா அவர்களால் (03) காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எஸ்.எம்.அஸாறுடீன் மற்றும் எம்.ஏ.எம்.நபீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.