சம்மாந்துறை அன்சார்.
யாரையும் வெறுக்காமல், இனம் மொழி பார்க்காமல் எல்லோர் மீதும் அன்பு செலுத்தவேண்டும், எனச் சிறுவன் அப்துல் கலாம் பேசிய காணொளி ஒன்று அண்மையில் தமிழ் நாடு மட்டுமல்ல உலகம் முழுக்க வைரல் ஆகியுள்ள நிலையில் குறித்த சிறுவனை அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டியுள்ளார்.
சாதி, மதப் பாகுபாடுகளைக் கற்பிக்காமல் சிறுவனின் மனதில் அன்பையும் மனிதநேயத்தையும் விதைத்த அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியர் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யூடுப் சணல் ஒன்று “உங்களுக்கு பிடிக்காதவர்” யார் என பொதுமக்கள் மத்தியில் கேள்வி ஒன்றைத் தொடுத்து பேட்டி கண்டனர் அதில் பேசியவர்களில் சிறுவன் அப்துல் கலாமும் ஒருவன் அதில் பேசிய போதுதான் சிறுவன் அப்துல் கலாம் தனது வயதுக்கு மீறிய முதிர்ச்சியான கருத்தினை கூறி அனைவரதும் பாராட்டினைப் பெற்றான் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.