தங்கள் நாட்டுக்கு வருவதற்கு முன்பு விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனையை இந்திய பயணிகள் மேற்கொள்ளத் தேவையில்லை என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புறப்படுவதற்கு முன்பு விமான நிலையங்களில் இந்தியப் பயணிகள் விரைவான RTPCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற விதிகளை துபாய் செவ்வாய்க்கிழமை நீக்கியது. புதிய விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட சுகாதார சேவை வழங்கும் நிறுவங்களிடமிருந்து, திட்டமிடப்பட்ட விமானம் புறப்படுவதற்கு 48 மணிநேரம் வரை எடுக்கப்பட்ட எதிர்மறையான COVID-19 சோதனைச் சான்றிதழை இந்தியர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், பயணிகள் PCR பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தான் நீக்கப்பட்டுள்ளது.
ட்ரான்ஸிட் பயணிகளுக்கும், கடைசி நேர பயண திட்டமிட்டவர்களுக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும். அதே நேரத்தில் பயணத்தின் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு விமான நிறுவனங்களைச் சார்ந்தது எனவும் எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. பயணத் தேவைகளில் திருத்தம் செய்வது, நகரத்தில் வசிக்கும் அல்லது அடிக்கடி பயணம் செய்யும் ஏராளமான இந்தியர்களின் நிலைமையை இந்த அறிவிப்பு எளிதாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.