காரைதீவு சகா.
ஹற்றன் நஷனல் வங்கி வருடம்தோறும் நடாத்தி வரும் சிறப்பு செயற்பாடுகளுக்கான சிறந்த வங்கி தெரிவில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சம்மாந்துறை ஹற்றன் நஷனல் வங்கி முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 23 ஹற்றன் நஷனல் வங்கிக் கிளைகளில் நடாத்தப்பட்ட போட்டிகளில் 2016ம் ஆண்டுக்கான சிறந்த வங்கிக்கான விருதை சம்மாந்துறைக் கிளை தனதாக்கிக் கொண்டுள்ளது.
அதற்கான விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் ஹற்றன் நஷனல் வங்கியின் தலைமயகத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜொனதன் அலெக்ஸ் விருதினை சம்மாந்துறை ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமையாளர் ஏ.எல். ரியாசுடீனுக்கு வழங்கினார்.
இப் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை ஹற்றன் நஷனல் வங்கிக் கிளை முதலாவது இடத்தினையும், இரண்டாம் இடத்தினை தாண்டவன்வெளி வங்கிக் கிளையும் மற்றும் மூன்றாவது இடத்தினை ஏறாவூர் கிளையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத் தக்கதாகும்.