(சர்ஜுன் லாபீர்,றாசிக் நபாயிஸ்)
"நாடும் தேசமும் உலகமும் அவளே" எனும் மகுட வசகத்தினை அடிப்படையாகக் கொண்டும் நிலையான எதிர்காலத்திற்காக பால்நிலை சமத்துவம் பேணல் என்னும் தொனிப்பெருளினை அடிப்படையாகக் கொண்டு உலகம் பூராகவும் கொண்டாடப்படும் 111வது சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யபட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று(மார்ச்-8) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான தர நிர்ணய மையத்தின் பணிப்பாளரும் பேராசிரியருமான கலாநிதி எம்.ஐ.எஸ் சபீனா கலந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்சான்,கிராம நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல்.பதியூத்தீன், மருதமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.எல்.எம்.நஜீப், கேப்சோ நிறுவன பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட், மருதமுனை பறக்கத் டெக்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்-ஹாஜ் எம்.ஜ.ஏ.பரீட், கிராமிய மகளீர் சங்க உறுப்பினர்கள், மற்றும் மகளீர் கலை இலக்கிய வட்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் "முனைமலர்" சர்வதேச மகளிர் தின சிறப்பு மலர் வெளியீடும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.