மாளிகைக்காடு நிருபர்
கல்முனை கமு/கமு/ றோயல் வித்தியாலயத்திலிருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சசையில் தேர்வாகிய மற்றும் சிறப்பு புள்ளிகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (24) வியாழக்கிழமை காலை பாடசாலை முன்றலில் அதிபர் எம்.எச்.எம். அன்சார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மேலும் கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பிரத்தியோக செயலாளரும் சிட்மன் நிறுவன பணிப்பாளருமான நௌபர் ஏ பாவா, அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண கணனி தொழிநுட்ப பேரவை பணிப்பாளருமான யூ. எல். என். ஹுதா உமர், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி வீ.எம். ஸம்ஸம், அந்நூர் சமூக அமைப்பின் பிரதேச இணைப்பாளர் ஐ.எல். றிசாட் (றஸ்மி), அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் பிரதி செயலாளர் ஏ.ஆர்.எம். ஜௌஸான், கலாச்சார செயலாளர் மௌலவி என். சப்னி அஹமட், கலை செயலாளர் கலைஞர் என்.எம். அலிக்கான், பாடசாலை பிரதியதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.