(செய்தி.முபாறக் அஸ்லம்)
இன்று சம்மாந்துறை பொது மைதானத்தில் எரிவாயு விநியோகம் நடைபெற்றது. எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய அருகில் உள்ள வீதியில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது பொலிஸ் அதிகாரிகள் மூலம் வந்த தகவலின் அடிப்படையில் எரிவாயு பொது மைதானத்தில் வழங்கப்படுவதாக தெரிவித்தார்கள்.
தகவலை தெரிந்து கொண்ட மக்கள் மிகவும் அவசரமாக எரிவாயு சிலிண்டரை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் எரிவாயு சிலிண்டரை சுமந்துகொண்டு பல தூரம் நடந்து செல்லுவதை புகைப்படம் மூலம் அவதானிக்க முடிகின்றது
சம்மாந்துறையில் கடந்த சில வாரங்களாக எரிவாயு தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் எரிவாயு விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதுடன் எரிவாயுயின்றி மக்கள பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இடைக்கிடையே மட்டுப்படுத்தப்பட்ட எரிவாயு விநியோகம் இடம்பெற்ற போதும் எல்லோருக்கும் தேவையானளவு எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியது. இதனால் மக்கள் நீண்டு வரிசையில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக நிற்பதனையும் காணக்கூடியதாக இருந்தது.