தேனீ கலை இலக்கிய மன்றத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய ரீதியில் இடம்பெற்ற அறிவிப்பாளர் போட்டியில் பல பகுதிகளிலும் இருந்து அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் சம்மாந்துறை இன்சாப் முதல் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தேசிய ரீதியில் வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் வாவிக்கரை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் பிறைக்கவி.அல்ஹாஜ்.முஸம்மில் அவர்களின் தலைமையில் நேற்று (26)நடைபெற்றது இன் நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத், சிறப்பு அதிதியாக ஏறாவூர் நகர சபை கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் MS.நழீம், தேனீ கலை இலக்கிய மன்ற தலைவர் சுபைர் முஹம்மது றாபி மற்றும் பல
அதிதிகள் கலந்து கொண்ட நிகழ்வில் AM.இன்சாப் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றமையைப் பாராட்டி சான்றிதழ், பணப்பரிசு மற்றும் இந்த நிகழ்வில் "குரல் தேனீ"விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.