மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவர்களைப் பதவி விலகுமாறு நான் கோரியதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளதோடு, நாடு எதிர்நோக்கும் பாரிய பொருளாதாரச் சவால்களை வெற்றிகொள்வதில் பலமான ஒரு சக்தியாக அவர் செயற்படுவார்.
என்னோடு உரையாடிய சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு - எமது அதிகாரிகள் பற்றி கலந்துரையாடவில்லை என்பதோடு, மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால் அவர்களும் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், நாட்டின் நிதிப் பிரச்சினைகள் தொடர்பாக மட்டுமே கலந்துரையாடப்பட்டது.
இதுபோன்ற பொய்யான மற்றும் போலியான அறிக்கைகளால் மனம் தளராமல், நமது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக அவரின் அனைத்து முக்கிய பணிகளையும் தொடர்ந்து முன்னெடுக்குமாறு, நான் மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவித்திருக்கின்றேன்.
எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊடகப் பிரிவு.