Ads Area

STR சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி : எஸ்.டி.ஆர் கழகமே வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது... !

 நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட 25 விளையாட்டு கழகங்கள் கலந்து கொண்ட STR சம்பியன்ஸ் கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் சம்பியனாக போட்டியை நடத்திய எஸ்.டி.ஆர் விளையாட்டு கழகமே தெரிவானது. கடந்த சில நாட்களாக  சம்மாந்துறை புதிய பொது மைதானத்தில் நடைபெற்ற  STR சம்பியன்ஸ் கிண்ண மென்பந்துகிரிக்கட் சுற்றுப்போட்டியில் தனது குழுவில் மோதிய சகல அணிகளையும் வீழ்த்தி எஸ்.டி.ஆர் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது. மறுமுனையில் தனது குழுவில் போட்டியிட்ட சகல அணியினரையும் வீழ்த்தி வெற்றி பெற்ற சம்மாந்துறை நியூசன் அணி இறுதி போட்டியில் எஸ்.டி.ஆர் விளையாட்டுக்கழகத்துடன் மோதியது .  

சம்மாந்துறை புதிய பொது மைதானத்தில் நடைபெற்ற இவ்விறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய S.T.R அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 63 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதற்கமைய பதிலுக்கு 64  ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட களம் இறங்கிய சம்மாந்துறை நியூசன் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 52 ஓட்டங்கை மாத்திரம் பெற்றுக் கொண்டு 11 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக எஸ்.டி.ஆர் அணி வீரர் சாஜித் மற்றும் தொடரின் நாயகனாக நியூசன் அணியின் வீரர் சாகிர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவ்இறுதியில் போட்டியில் இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்fனான் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு கிண்ணங்களை வழங்கி வைத்தார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe