இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீந்தி சாதனை படைத்த 16 வயதுடைய இளம் நீச்சல் வீரர் அன்சுமான் ஜிங்ரான்.
மும்பையைச் சேர்ந்த 16 வயதான அன்சுமான், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான 30 கிலோமீட்டர் கடல் பரப்பை வெறும் 9 மணி நேரம் 49 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்திருக்கிறார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே 30 கிலோமீட்டர் கடலில் உள்ள பாக் ஜலசந்தியைக் விரைந்து கடப்பதைக் குறிக்கோளாக கொண்ட நீச்சல் வீரர் அன்ஷுமான் ஜிங்ரான் 9 மணி நேரம் 49 நிமிடத்தில் தனுஷ்கோடி வந்தடைந்தார்.
நேற்று அதிகாலை 5.15 மணிக்கு இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து அன்சுமான் கடலில் இறங்கி, இந்தியாவின் ராமேஸ்வரம் தனுஷ்கோடி நோக்கி கடல் வழியாகச் நீச்சல் அடித்து வந்தார்.
இந்த சவாலான பயணம் மொத்தம் 9 மணி நேரம் 49 நிமிட நேரத்தில் முடிக்கப்பட்டு பிற்பகல் 3.04 மணிக்கு முடிந்தது. இந்த சாதனையை தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பார்வையாளர் உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து சாதனை குறித்து அன்சுமான் ஜிங்ரான் பேசுகையில், “பாக்ஜலசந்தியைக் கடக்கும் எனது பணியை முடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மூன்று வருடங்களாக எனது இலட்சியம் ஏழு பெருங்கடலிலும் நீந்தி முடித்து உலக சாதனை படைப்பதாகும், என்றார்.
அன்சுமான் சாதனைகள் :-
இதற்கு முன் மும்பை கடற்கரையில் தொடங்கி அரபிக்கடலில் ஒரு மாதத்தில் 200 கிமீ தூரம் நீந்தி சாதனை படைத்துள்ளார். குஜராத் அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட சோர்வாட் முதல் வெராவல் வரையிலான 42 கிமீ வீர் சாவர்க்கர் அகில இந்திய கடல் நீச்சலையும் அவர் வெற்றிகரமாக முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.