மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தெளபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் அரசுக்கு ஆதரவளிப்பதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக, பைசல் காசிம் எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று (20) பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய பைஸல் காசிம் எம்.பி.,
"இன்றிலிருந்து நானும், பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் அவர்களும் இஷாக் ரஹ்மான் ஆகியோர், அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவிலிருந்து விலகிக் கொள்கிறோம்."
"நான் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய காலத்தில் உதவி செய்த அமைச்சர்களுக்கு நான் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்"
நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் அதிகளவில் தெரிவித்திருந்த போதிலும் அது தொடர்பில் அவர்கள் கவனத்தில் கொள்ளவும் இல்லை. எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே இம்முடிவை எடுத்துள்ளதால் அவர் இதன்போது தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் உள்ளிட்ட அரசாங்கத்தின் பல்வேறு விடயங்களுக்கு ஆதவளித்த எதிர்க்கட்சி உறுப்பினர்களில் குறித்த மூவர் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.கா. உறுப்பினர்களான பைஸல் காசிம் மற்றும் எம்.எஸ் தௌபீக் ஆகியோர் முறையே திகாமடுல்ல மற்றும் திருகோணமலை ஆகிய தேர்தல் மாவட்டங்களிலிருந்து ஐ.ம.ச. சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பதுடன், இஷாக் ரஹ்மான் அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து ஐ.ம.ச. சார்பில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினராவார்.
இதேவேளை, முஸ்லிம் காங்கிஸ் உறுப்பினரான ஹாபிஸ் நசீர் அஹமட், சுற்றாடல் அமைச்சராக அண்மையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - தினகரன்.