தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் கணவனால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சவுதிப் பெண் ஒருவரின் நல்லடக்க நிகழ்வில் பெரும்திரளான பொதுமக்கள் கலந்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். மரணமடைந்த பெண்ணின் இறுதிச் சடங்கிக்கான ஜனாசாத் தொழுகை கடந்த ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றதோடு அவரின் நல்லடக்கம் மக்காவில் உள்ள புனித அல்-ஷராய் சுற்றுப்புறத்தில் உள்ள அல்-ஷுஹாதா அடக்கஸ்தளப் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது,
சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா பகுதியில் வசித்து வந்த கொலையாளியான கணவர் தனது மனைவி மீது ஏற்பட்ட சண்டை காரணமாக தனது மனைவி மற்றும் தனது முந்தைய திருமணத்தில் பிறந்த மகள் ஆகியோர் மீது எரியக்கூடிய அசிட் அமிலத்தை ஊற்றி தாக்கியுள்ளார் உடம்பு முழுவதும் அசிட் வீச்சுக்கு ஆளான மனைவி மற்றும் மகள் ஆகியோர் துடிதுடித்துக் கொண்டிருக்க அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பலத்த தீக்காயம் அடைந்த அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கிங் ஃபஹத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்ட போதும் அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு மகளுக்கு தீவிரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சவுதி முழுதும் பரபரப்பாக பேசப்பட்ட இக் கொடூர சம்பவத்தில் கொலையுண்ட பெண்ணின் நல்லடக்க நிகழ்வின் போது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.