தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் பிச்சையெடுத்து வந்து ஆசிய மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த பல பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் பொதுமக்களின் அனுதாபங்களை பயண்படுத்தி பிச்யெடுத்து வந்த நிலையில் குவைத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது மீதான விசாரனைகள் முடிவுற்ற பின்னர் அனைவரும் நாடு கடத்தப்படவுள்ளதாக குவைத் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
அரபு நாடுகளில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும், அங்கு பிச்சையெடுப்பவர்களுக்கு சிறை மற்றும் அபாரதங்களும் விதிக்கப்படுவது வழக்கம்.
அண்மையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலும், சவுதி அரேபியாவிலும் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்ட பல பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.