பேச்சுசுதந்திரத்தால் நீங்கள் அச்சுறுத்தப்பட்டால் நீங்கள் நாட்டை ஆள்வதற்கு தகுதியற்றவர்என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கான டுவிட்டர் செய்தியில் எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்
அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது. சமூகஊடகங்களின் காலத்திற்கு முன்னரும் புரட்சிகள் காணப்பட்டன.
கோத்தபாய ராஜபக்ச அவர்களே உங்கள் மீதும் உங்கள் அரசாங்கத்தின் மீதும் காணப்படும் கோபம் வெறுப்பலைகளை தடுப்பதற்கு சமூக ஊடக தடையால் எதனையும் செய்ய முடியாது.
பேச்சுசுதந்திரத்தால் நீங்கள் அச்சுறுத்தப்பட்டால் நீங்கள் நாட்டை ஆள்வதற்கு தகுதியற்றவர் எனவும் தெரிவித்துள்ளார்.