சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையை அடுத்து சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்-விபிஎன் கிடைப்பது – தற்போது நான் பயன்படுத்துவதுபோல-அவ்வாறான தடைகளை முற்றாக அர்த்தமற்றதாக்கிவிடுகின்றது. அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என நாமல் ராஜபக்ஷ ட்வீட் செய்துள்ளார்.