தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணியார்களாக வருகை தரும் வீட்டுச் சாரதி, வீட்டுப் பணிப் பெண் மற்றும் ஏனைய வீட்டுப் பணியாளர்கள் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டாலும் சவுதிக்கு வர முடியும் என சவுதி அரேபிய சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையகம் தெரிவித்துள்ளது.
தனது வீட்டுக்கு வேலைக்காக வருகை தரும் பணியாளர் இதுவரை தடுப்பூசி செலுத்தவில்லை அவரால் சவுதிக்கு வர முடியுமா என சவுதி அரேபிய குடிமகன் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
வீட்டுப் பணியாளர்கள் சவுதிக்கு வரும் போது அவர்களுக்கு தடுப்பூசி அவசியமில்லை அதே போல் அவர்கள் பீ.சி.ஆர். பரிசோதனைகள் பெற்றிருப்பதும் அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா கடந்த மார்ச் மாதம் 05ம் திகதி பல்வேறு கொரேனா கட்டுப்பாடுகளை நீக்கியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.