இலங்கையின் தோல்வியடைந்த பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள காலி முகத்திடல் மைதானத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு காலி முகத்திடலில் உள்ள இந்த ஆர்ப்பாட்ட பகுதிக்கு போராட்டக்காரர்களால் 'கோட்டா கோ கம' என பெயரிடப்பட்டுள்ளது.
இங்கு போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளனர், உணவு, மருந்துகள் மற்றும் பிற தேவைகளையும் வழங்கி வரும் அதே வேளை போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களின் வசதிக்காக பொது கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
காலி முகத்திடலில் உள்ள ஆர்ப்பாட்டப் பகுதிக்கு ‘கோதா கோ கம’ என பெயரிட்ட அட்டைப் பலகையால் ஆன பதாதையை ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்துள்ளனர்.
முதலில் சிங்களத்தில் இருந்த ‘கோட்டா கோ காமா’ என்ற புதிய பெயர் ஆங்கிலத்தில் ‘கோட்டா கோ வில்லேஜ்’ என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.