Ads Area

பா.உ. முஷாரப் அவர்களின் அமைச்சுப் பதவி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.முஷாரப், அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை வாபஸ் பெற்று, அதற்கு பதிலாக அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், அரசாங்கத்திற்கான தனது ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், தான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஆடைக் கைத்தொழில் மற்றும் உள்ளூர் உற்பத்திகள் மேம்பாட்டுக்கான புதிய இராஜாங்க அமைச்சராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் கூறியுள்ளார். மேலும் அவர் இன்று உலக வர்த்தக மையத்தில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் தனது கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளார்.

இருந்தும் 24 புதிய இராஜாங்க அமைச்சர்கள் அடங்கிய ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்பின் பெயர் இடம்பெறவில்லை எனவும் அவரது நியமனம் குறித்து ஜனாதிபதி அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe