தற்போதைய அரசாங்கத்தை எதிர்த்து வீதி இறங்கி போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை நம்பி சிறுபான்மை மக்கள் நிதானமாக செயல்படுவது காலத்தின் தேவை.
பாராளுமன்றத்தை பிரதிநிதிப்படுத்தும் எதிர் கட்சி மற்றும் எதிர் தரப்பினர் இந்த அரசை உடனடியாக கலைக்க ஆர்வம் காட்டவில்லை திடீர் என பாராளுமன்றத்தில் 2/3 எடுத்து மீதி காலத்தை மக்களை திருப்தி படுத்தும் அளவுக்கு அரசை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது என்பது அவர்கள் தெரிந்த விடயம் என்பதால் இவர்கள் அணைவரும் எதிர்வரும் 2024 தேர்தலை நோக்கிய சுயநல சிந்தனையுடன் காலத்தை கழிக்க நகர்கின்றனர் என்பது தெளிவாகிறது. இது சம்பந்தமாக அண்மையில் ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கூறி உள்ளார்.
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் வெறுமனே ஒரு உல்லாச நிகழ்ச்சி நிறலாக மாற்றம் பெற்று வருகிறது என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அண்மையில் கேகாலையில் நடாத்திய பெண்கள் போராட்டத்தில் தெளிவாக SJB இன் தேசிய பெண்கள் அமைப்பாளரும் முன்னால் பா.உ மான ஹிரூனிக்கா பிரேமச்சந்திர பகிரங்கமாக இது பற்றி கூறியிருந்தார்.
ஆகவே சிறுபான்மை நாம் பல வழிகளில் சிந்திக்க கூடியவர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும். அரசியல் மாற்றம் எமக்கு தேவை இருந்தும் நாம் ஆர்வக்கோலாறு கொண்டவர்கள் பட்டியலுக்கு வந்துவிடக்கூடாது என்பதே எனது கருத்து.
இங்கு மேலும் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்
இலங்கையின் எதிரணி அரசியல் செய்யும் பெரும்பான்மை மக்களை கவர்ந்து வரும் கட்சிகள் SJB மற்றும் JVP அத்துடன் UNP போன்ற கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு ஒற்றுமை போக்கு வரும் வரை தற்போதைய இந்த கொடூர ஆட்சியை உடனடியாக கவிழ்த்த ஒருபோதும் முடியாது. எதிரணியினரின் பலவீனம் தொடருமானால் ராஜபக்ஷ குடும்ப ஆட்சி காலம் முடியும் வரை அவர்களின் அட்டகாச ஆட்சியை கொண்டு செல்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆகவே நாம் சிறுபான்மை முஸ்லிம் தமிழ் சமூகம் மிகவும் கடுமையாக சிந்தித்து செயல்படுவது சிறந்தது என்பது எனது கருத்தாக உள்ளது.
முஸம்மில் மொஹிதீன்
தலைவர்
தேசிய விடுதலை மக்கள் முன்னணி NLPF