முன்னணி ஆசிரியர் திஸ்ஸ ஜனநாயக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவளித்ததற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆசிரியர் திஸ்ஸ ஜனநாயக்க விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு, “இந்த நாட்டின் குடிமக்களிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன். இந்த அரசாங்கத்தை ஆதரித்து நான் ஏமாற்றப்பட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்ற நம்பிக்கையின் பேரில் தானும் பலருடன் இணைந்து ஜனாதிபதி கோத்தபாய ஆதரவளித்ததாக திஸ்ஸ ஜனநாயக்க தெரிவித்துள்ளார்.
இனிமேல் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் நடுநிலைமையுடன் இருப்பேன் என்றும் ஜனாநாயக்க மேலும் கூறினார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.