Ads Area

அம்பாறை, சாய்ந்தமருதில் மூதாட்டி கொலைச் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

 மாளிகைக்காடு நிருபர்

அம்பாறை, சாய்ந்தமருதில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாக இருந்த சந்தேக நபர் இன்று  கைது செய்யப்பட்டார். சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான பொலிசாரினால் மட்டக்களப்பில் வைத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

சாய்ந்தமருது புதுப்பள்ளி வீதியிலுள்ள வீடொன்றில் தனித்து வசித்து வந்த 83 வயதுடைய சுலைமான் செய்யது புஹாரி என்னும் மூதாட்டியை கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருந்த கொலை சந்தேக நபர் இன்று மட்டக்களப்பு விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மூதாட்டியிடம் இருந்த நகைகளை அபகரிக்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை பல நாள் தேடுதலின் பின்னர் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe