இலங்கை முழுவதும் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ரம்புக்கன, ஹிங்குராக்கொட, பத்தேகம, திகன, கம்பளை, இரத்தினபுரி, மஹவ, கட்டிகஸ்தோட்டை, மடவளை, பானந்துறை, அநுராதபுரம், மாத்தறை மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் தற்போது போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிலையங்களில் மக்கள் மற்றும் வாகனங்களின் நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.