Ads Area

சாய்ந்தமருதில் தீ விபத்து மூன்று வீடுகள் சேதம் !

 (எம்.என்.எம்.அப்ராஸ்)

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது-02 ஆம் பிரிவு  சாஹிரா கல்லூரி வீதியில் இன்று (30) மதியம்  வீடொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் வீட்டின் உடமைகள் முழுமையாக சேதமடைந்துடன் இதனால் அருகில் இருந்த இரு வீடுகளுக்கும் பகுதியளவில்  சேதமடைந்துள்ளது

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

வீட்டில் மதிய உணவு சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேலையில் மண்ணெண்ணெயை உமி அடுப்பில் உற்றும் போது தீ மேலெழுந்ததால் வீட்டினுள் காணப்பட்ட வைக்கோலில் தீ திடீரென பரவியதால் வீட்டில் இருந்த உடைமைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக சம்பவம் தொடர்பில் தெரியவருகின்றது .

அத்துடன் குறித்த வீட்டுக்கு அருகில் இருந்த இரு வீடுகளும் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது 

சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை மாநகர தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். 







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe