சம்மாந்துறை அன்சார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை எதிர்ப்புகள் மற்றும் அரசியல் கொந்தளிப்பைத் தொடர்ந்து நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கான பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கையில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகம் தனது குடிமக்களுக்கு அறிவித்துள்ளது.
"இலங்கைக்குச் செல்லத் திட்டமிடும் குடிமக்கள் தங்கள் திட்டங்களை தற்போதைக்கு ஒத்திவைக்க வேண்டும்" என்று தூதரகம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போது ஏற்பட்டுள்ள எதிர்ப்புக்கள் மற்றும் பேரணிகள் இதற்குக் காரணம் என்று தூதரகம் தெரிவித்துள்ளது, இதன் விளைவாக தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.