சம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய உறுப்பினராக அப்துல் ஹமீட் அன்வர் (றமீஸ்) இன்று (09) திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் முன்னிலையில் தவிசாளர் அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்டு உறுப்பினராக பதவி வகித்து வந்த வை.வீ.முஹம்மட் முஸம்மில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அப்துல் ஹமீட் அன்வர் (றமீஸ்) அவர்கள் அக்கட்சியினால் புதிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.