Ads Area

ஐக்கிய அரபு இராஜ்ஜிய அபுதாபியில் உள்ள உணவகம் ஒன்றில் கேஸ் வெடித்து இருவர் மரணம் 106 பேர் படுகாயம்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜிய அபுதாபி நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கேஸ் வெடித்ததில் இருவர் மரணமடைந்துள்ளதாகவும், 106 பேர் வரை படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணமடைந்த இருவரில் ஒருவர் இந்தியர் எனவும் மற்றயவர் பாகிஸ்தானியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு தற்போது சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய அரபு இராஜ்ஜிய சுகாதாரத் துறை அதிகாரிகள் விபத்தில் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe