பாறுக் ஷிஹான்
76 யானை கஜமுத்துக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைவாக இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுஎல பகுதியில் சனிக்கிழமை (28) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 67 வயதுடைய தேவாலஹிந்த பிரதேசத்தைச்சேர்ந்தவர் என்பதுடன், முன்னாள் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தருமாவார்.
மேலும், விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்களின் பெறுமதி சுமார் 65 இலட்சத்திற்கும் அதிகமாகுமென்பதுடன், சம்பவம் தொடர்பில் இங்கினியாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் விசாரணைகளின் பின்னர் அம்பாறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.