முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில், முள்ளிவாய்க்காலில் உயிரைப் பறிகொடுத்த மக்களின் குடும்பத்தினருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபத்தை தெரிவித்துள்ளதோடு, காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இன்னும் அவர்களை தேடி அலைகின்ற அவலம் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது என்றும், அவர்களை கண்டுபிடித்துக் கொடுக்க அரசு ஆவன செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், குற்றங்கள் சுமத்தப்படாத நிலையில் எத்தனையோ பேர் இன்னும் சிறையில் வாடுகின்றனர். அவ்வாறு சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்களை அரசு தொடர்ந்தும் காலம் கடத்தாமல், அவசரமாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இன்றைய தினத்தில் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
ஊடகப் பிரிவு.