ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக முன்பதிவுகள் செய்யாது யாரும் திணைக்களத்திற்கு வர வேண்டாம் முன் நியமனம் செய்த (appointments) விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டு சேவைகள் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாதவது, பொதுமக்கள் முன் நியமனம்கள் செய்து விட்டு பாஸ்போட் அலுவலகத்திற்கு வரவேண்டும் என கட்டாயமாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதிகளவான மக்கள் முன் நியமனங்கள் இன்றி திணைக்களத்திற்கு வருகை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
முன் நியமனம் பெறாமல் வருகை தரும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தவிர்க்க முடியாதவை எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு http://www.immigration.gov.lk/ சென்று அல்லது 070-7101-060 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்வதன் மூலம் முன் நியமனங்கள் பெற முடியும்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுமுறை நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை திறந்திருக்கும்.
செய்தி மூலம் - https://www.themorning.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.