வெளிநாடுகளில் இருந்து விடுமுறையில் வருவோர் தற்போதைய நெருக்கடி நிலைகளை கவனத்தில் கொண்டு தத்தமது குடும்பத்தினருக்கு தேவைப்படும் அத்தியாஷ்ய பொருட்களை முன்னுரிமைப்படி கொண்டு வர வேண்டும்.
சூரிய சக்தி மின்சார கட்டளைகள், மின்பிறப்பாக்கி (தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதனை கவனத்திற் கொள்ளவும்) இமர்ஜன்ஸி லைட்கள் போன்ற பொருட்களையும் கொண்டு வரலாம்!
நண்பர்கள் உறவினர்களுக்கு கிஃப்ட் களாக அவ்வாறான தேவைகளையறிந்து கொண்டு வந்து கொடுக்கலாம்.
கையில் கொண்டுவரும் பொதிகள், விமான லக்கேஜ் பொதிகளுக்கு புறம்பாக கார்கோ பொதிகளை கொண்டுவரும் பொழுது ஆசைகள் தேவைகள் அத்தியாவசிய தேவைகளை அறிந்து அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இலங்கையில் மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் குடும்ப உறுப்பினர்கள் பெற்றார்களுக்கு தேவையான மருந்து வகைகளை அதற்குரிய வைத்தியரின் சிபாரிசு படிவத்தை வரவழைத்து சுங்கத் திணைக்கள அறிவுத்தல்களுக்கமைய அவற்றை கைப் பொதிகளில் கொண்டு வரலாம்.
தற்போதைய பணவீக்கத்தை கவனத்தில் கொண்டு இங்கும் அங்கும் விலைகளை தீர்மானித்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும், உ+ம் டாலர்களைப் போன்றே ரியால் திர்ஹம் டினார்கள் 50% வீத மாற்றத்தை கண்டுள்ளன, சிலபொருட்கள் விலையேற்றத்தின் பின்னரும் இலங்கையில் இலாபமாக இருக்கலாம்.
நீங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு வழங்கும் மிகப் பெரிய சன்மானம் ஒருவருக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அதற்காக உதவும் நிலையான தர்மம் ஆகும்.
பணவீக்கத்தின் காரணமாக நீங்கள் உழைக்கும் வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி அதிகரித்திருப்பதால் சதகா தானதர்மங்களின் வசந்த காலத்தை உங்கள் ஆயுள் வாழ்வாதார விருத்தியிற்கான சந்தர்ப்பங்களாக கருதி உறவினர்கள் அண்டை அயலவர்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
18.05.2022