நாளை வெள்ளிக்கிழமை (20) பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என பொதுத்துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என பொதுத்துறை ஊழியர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளில் உள்ளவர்கள் மாத்திரம் நாளை கடமைக்கு சமூகமளிக்குமாறும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.