Ads Area

அரசமைப்பின் 20வது திருத்தத்தை நீக்கவேண்டும் - மக்கள் இன்னமும் வரிசைகளில்தான் நிற்கின்றார்கள்.

மக்கள் இன்னமும் வரிசைகளில்தான் நிற்கின்றார்கள் புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரும் எதுவித மாற்றங்களும் இடம்பெறவில்லை என இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரிய தனது முகநுால் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்,

அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

அரசமைப்பின் 20வது திருத்தத்தை நீக்கவேண்டும். 20வது திருத்தத்தை ஒழிப்பதுதான் அரசாங்கத்தின் நேர்மையை தீர்மானிப்பதற்கு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ள அவர் புதிய அரசாங்கம்  நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களாகியும் எதுவும் இடம்பெறவில்லை என்பது கவலையளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

எங்கள் மக்கள் இன்னமும் வரிசைகளில் அவலப்படுகின்றனர் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் இதுபோதும் என்று நினைத்து மக்களின் துன்பங்களை தயவு செய்து மறந்துவிடாதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe