Ads Area

இந்த ஆண்டில் ஜூலை 23 வரை 166,719 பேர் வெளிநாடு செல்ல பதிவு - அமைச்சர் மனுஷ நாணயக்கார

இந்த ஆண்டில் இலங்கையில் வெளிநாட்டு வேலைகளுக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கூற்றுப்படி, 23 ஜூலை 2022  நிலவரப்படி, 166,719 நபர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துள்ளனர்.

உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், அந்நிய செலாவணி வருவாயை அதிகரிப்பதற்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தவும், சட்ட வழிகள் மூலம் பணம் அனுப்புவதையும் மேம்படுத்துவதற்கும் இலங்கை எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe